Tuesday, February 15, 2011

The Man From Earth 2007 (ஆங்கில திரைப்படம் )



பொதுவா டிவில போடுற சீரியல எடுத்துக்கலாம். அதிகபட்சமா 20 நிமஷம் ஓடுற சீரியல்ல குறைஞ்சபட்சம் மூணு வேற வேற இடத்துல எடுத்த காட்சிகள் இருக்கும். கதைல எந்த முன்னேற்றமும் இல்லைனாலும், பாக்குற மக்களுக்கு சலிப்பு வரக்கூடாதுன்னு அப்படி எடுப்பாங்க. ஆனா இந்த படத்த பொருத்தவர, ஒன்றரை மணிநேரம் ஓடும் படம் முழுவதும், ஒரே வீட்டில் எட்டு பேர் பேசுறத மட்டும் படமா கொடுத்துருக்காரு, இயக்குனர் ரிசேர்ட் சென்க்மேன் (Richard Schenkmen ). ஆனால் கண்டிப்பா படம் முடியும் வரை எழுந்து போக மனசு வராது, அது மட்டும் நிச்சயம். கிறிஸ்துவர்களுக்கு இந்த படத்தை பார்த்தால் கோபம் வரலாம்.

ப்ரோபசர் ஜான் ஒல்ட்மன் (John Oldman) தன்னுடைய பொருட்கள் எல்லாத்தையும் டிரக் ஒன்றில் ஏத்திக்கொண்டு இருப்பதோடு படம் துவங்குகிறது. ஊரைவிட்டு செல்ல முடிவுசெய்த ஜானை வழியானுபிவைக்க வருகின்றனர், நண்பர்கள் மற்றும் உடன் வேலைசெய்பவர்கள்.
ஹாரி (harry-Biologist),
எடித் (Edith) ஜானுடன் வேலைசெய்யும் வயதான பெண். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்,
டேன் (Dan) மனிதவியல் நிபுணர்,
சென்டி (Sandy) ஜான் மீது காதல் கொண்டிருக்கும் பெண்,
டாக்டர் வில் க்ருபர் (Dr.Will Gruber) மனோதத்துவ நிபுணர் ,
ஆர்ட் (Art-archaeologist)
லிண்டா (Linda) ஜானின் மாணவி,

இவர்கள் அனைவரும் ஜான் ஊரைவிட்டு செல்லும் காரணத்தை கேட்க, ஜான் சில நம்பமுடியாத கதைகளைக் கூறுகிறார். தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த குகை மனிதன் என்றும், 14000 ஆண்டுகளாக உயிருடன் இருப்பதாகவும் கூறுகிறார். ஜானின் கதையை அனைவரும் நம்ப மறுக்க, தன் வரலாற்றை கூறுகிறார்.

சுமேரியன்னாக 2000 வருடமும், பாபிலோளியனாக பலவருடங்களும், வாழ்ந்ததை கூறும் ஜான், தான் புத்தரின் சீடனாக இருந்ததாகவும் கூறுகிறார். மேலும் கொலம்பசுடன் வேலை செய்ததாகவும் பல சரித்திர பெயர்களை குறிப்பிடுகிறார்.

அனைவரும் பலவிதங்களில் கேள்விகள் கேட்க அனைத்திற்கும் சரியாக பதில் அளிக்கிறார் ஜான். இருந்தாலும் அதை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

சிறுதுநேரத்தில், பேச்சு, மதத்தின் பக்கம் திசைமாற, தான் எந்த மதத்தை சார்ந்தவனும் அல்ல, கடவுள் தேவையற்றது என்று கூறுகிறார். திடீரென தற்போது கடவுளாக வணங்கப்படும் இயேசு (Jesus) தான்தான் எனவும் அவர் கூறுகிறார். இதை கேட்டதும் கடும் கோபம்கொண்டு கதரியழுகிறார் எடித். ஜானுக்கு மனநிலை சரியல்ல என்றும், கடும் போதைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் முடிவு செய்கின்றனர்.

இந்த விவாதத்திற்கு பிறகு அங்கு அனைவருக்கும் கோபம் அதிகமாக, க்ருபர் துப்பாலக்கி முனையில், தான் கூறியது பொய் என ஒப்புகொள்ளுமாறு மிரட்டுகிறார். சிறிய கலவரத்திற்குபிறகு, தான் கூறியது அனைத்தும் பொய் எனவும், அவர்களை ஏமாற்ற எண்ணியே அவ்வாறு கூறியதாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கிறார். கோபத்துடனும் சிறு புன்னகையுடனும் அனைவரும் அங்கிருந்து செல்கின்றனர் ஜானின் காதலியை தவிர.

தான் மிரட்டியதற்கு மன்னிப்பு கேட்பதற்காக திரும்பி வரும் க்ருபர், ஜான் லின்டாவிடம் பேசுவதை கேட்கிறார். அறுபது வருடங்களுக்கு முன்பு ஜான் தாமஸ் என்ற பெயரில் பாஸ்டனில் கெமிஸ்டரி ப்ரோபசராக ஜான் பணிபுரிந்துள்ளார். ஜான் தாமஸ் வேறு யாரும் அல்ல, க்ருபெரின் தந்தை. இதை கேட்டதும் க்ருபர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே விழுந்து இறக்கிறார்.   க்ருபரின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிவிட்டு ஜான் ஊரைவிட்டு செல்கிறார்.

10 comments:

அஞ்சா சிங்கம் said...

அருமையான படம் நிறைய எழுத்து பிழை இருக்கிறது ............

உளவாளி said...

அஞ்சா சிங்கம் said...
அருமையான படம் நிறைய எழுத்து பிழை இருக்கிறது
\\\\\\\\\\\\\\\\\\\\\\\

மன்னிசுகொங்க தல, இனிமேல வராம பாத்துகிறேன்.

ம.தி.சுதா said...

superb post.. thanks...

உளவாளி said...

ம.தி.சுதா said...
superb post.. thanks...
\\\\\\\\\\\\\

வருகைக்கு நன்றி..

Philosophy Prabhakaran said...

ஹி... ஹி... ஹி... உளவாளியின் ரகசியம் கசிந்துவிட்டதே பிரதர்... டெத் நோட் எழுதினப்பவே நான் யோசிச்சிருக்கணும்...

உளவாளி said...

ரஹீம் கஸாலி said...

நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.
\\\\\\\\\\\\\\\\
மிக்க நன்றி...

உளவாளி said...

Philosophy Prabhakaran said...

ஹி... ஹி... ஹி... உளவாளியின் ரகசியம் கசிந்துவிட்டதே பிரதர்... டெத் நோட் எழுதினப்பவே நான் யோசிச்சிருக்கணும்...
\\\\\\\\\\\\

ஹி ஹி ஹி ... இருந்தாலும் நாங்க பில்டப் கொடுப்போம்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வலைச்சரம் ஊடாக உங்கள் தளம் இன்று வருகை தந்தேன். தொடர்ந்து நல்ல பதிவுகள் பகிர வாழ்த்துக்கள்

உளவாளி said...

தோழி பிரஷா said...
வலைச்சரம் ஊடாக உங்கள் தளம் இன்று வருகை தந்தேன். தொடர்ந்து நல்ல பதிவுகள் பகிர வாழ்த்துக்கள்
///////////

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி...

Unknown said...

இந்தப் படம் பார்த்து இல்லை நண்பரே..... எழுத்து பிழைகள் வரத்தான் செய்யும்,போக போக சரி ஆகிவிடும் நண்பரே.....என் ஆரப்மகால பதிவுகளைப் படத்தி பாருங்கள் தெரியும்......

Post a Comment